IPL Prithvi Shaw
IPL Prithvi Shaw

IPL Prithvi Shaw – ஐ.பி.எல் – பிரித்வி ஷா இந்திய அணியின் இளம் வீரர். காயத்தின் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்கும் அவர் ஐ.பி.எல். போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ளுவர் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த மே.தீ. அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானவர், இளம் வீரர் பிருத்வி. அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதனை அடுத்து, ஆஸ்., எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் பயிற்சியின் பொது ஏற்பட்ட எதிர்பாராத காயத்தால் அவர் அந்த தொடரில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

பிரித்வி கூறியது : ஆஸ்., மைதானங்களில் விளையாட வேண்டும் என்பது என் ஆசை.

ஆனால், எதிர்பாராத காயத்தால் என் ஆசை நிறைவேறவில்லை. இருந்தும் இந்தியா தொடரை வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம்.

காயம் தற்போது மெல்ல சரியாகி வரும் நிலையில் நிச்சயம் நான் வரும் ஐ.பி.எல் போட்டியில் களமிறங்குவேன்.