IPL Cricket Rajasthan Royals
IPL Cricket Rajasthan Royals

IPL Cricket Rajasthan Royals – ராஜஸ்தான் ஐ.பி.எல், அணியின் பெரும்பாலான பங்குகள் விற்பனை செய்யபட்ட உள்ளதாக தெரிகிறது. கடந்த 2008 இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் “டுவென்டி-20” தொடர் துவங்கப்பட்டது.

முதல் “சீசனில் ” கோப்பை வென்ற ராஜஸ்தான் அணிக்கு சூதாட்ட சர்ச்சை காரணமாக 2016, 2017 சீசனில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த சீசனில் எலிமினேட்டர் போட்டி வரை சென்றது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் உரிமையாளராக உள்ள மனோஜ் பாடலே தனது பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி கூறியது : ராஜஸ்தான் அணி உரிமையாளர் படாலே, தன்னிடம் உள்ள சுமார் 50 சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனம் இதை கைபற்ற முயற்சித்து வருகிறது. 2016,17 ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்ற புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே பங்குகளை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

இவர், ஏற்கனவே ஐ.பி.எல்., கால்பந்து தொடரின் கோல்கட்டா அணியின் சக உரிமையாளராக இருக்கிறார்.

தற்போது, மீண்டும் ஐ.பி.எல். தொடரில் நுழைய விரும்புகிறார். இருப்பினும் கோயன்கே சார்பில் எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.