
IPL 2019 Update – 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை தொடரின் தேதியை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.
வருகிற 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றது.
மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த உலக கோப்பை போட்டியில் பங்கு பெற இருக்கும் அணிகளின் விவரம் மற்றும் போட்டி நடைபெறும் தேதி மேலும் போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளம் உள்ளிட்ட பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது.
ஐபிஎல் போட்டிகளை போல 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியும் அனைத்து அணிகளும் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும் படி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.
போட்டிகளின் இறுதியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும்.
இந்தியாவின் போட்டி அட்டவணை :
ஜூன் 5 | தென் ஆப்ரிக்கா |
ஜூன் 9 | ஆஸ்திரேலியா |
ஜூன் 13 | நியூசிலாந்து |
ஜூன் 16 | பாகிஸ்தான் |
ஜூன் 22 | ஆஃப்கானிஸ்தான் |
ஜூன் 27 | மேற்கு இந்திய தீவுகள் |
ஜூன் 30 | இங்கிலாந்து |
ஜூலை 2 | வங்கதேசம் |
ஜூலை 6 | இலங்கை |
ஜூலை 6-ஆம் தேதி லீக் போட்டிகள் முடிவடைந்து, 9-ஆம் தேதி அரையிறுதி போட்டி நடக்கும் மற்றும்,
11-ஆம் தேதி இரண்டாம் அரை இறுதி போட்டியிம் 14-ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது.