Indian 2 Update

Indian 2 Shooting : பாலிவுட் ஹீரோவுடன் ஷங்கர் இணைய இருப்பதாகவும் இந்தியன் 2 படத்தின் அப்டேட் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 படத்திற்கு பிறகு யாருடன் இணைய உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஆம், பிரபல பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷனுடன் இணைய இருப்பதாகவும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதால் கமல்ஹாசன் ரசிகர்களும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் ரித்திக் ரோஷன் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.