இந்தியன் 2 படம் மீண்டும் துவக்கப்பட்டது.. இதில் வில்லன் யார்??என தேடப்பட்டு வந்த நிலையில் வில்லன் நடிகர் யார் என தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் “இந்தியன்” இந்தப் படத்தில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து வெளியானது. 

இதன் இரண்டாம் பாகம் பல தடைகளை மீறி தற்பொழுது படமாக்க துவங்கப்பட்டுள்ளது. இதிலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

இவருக்கு வில்லனாக நடிக்க பல நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் சுபாவம் கொண்ட விக்ரம் படத்தின் வில்லனாக நடித்து பலரால் பாராட்டப்பெற்ற நடிகர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்ட தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி,96 போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான “மக்களின் செல்வன் விஜய் சேதுபதி” அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.