இந்தியன் 2 படக்குகுழுவினருடன் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் அவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Indian 2 movie team celebrate director Shankar birthday photos viral:

கோலிவுட் திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இவர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் தமிழில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டு திரைப்படங்களையும் உருவாக்கி வரும் ஷங்கர் அவர்கள் நேற்றைய தினம் தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறிய நிலையில் நேற்றைய தினம் இந்தியன் 2 படக்குழுவினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்புகைப்படங்களை இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.