India vs Australia Update
India vs Australia Update

India vs Australia Update – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 105.5 ஓவேர்களில் 283 ரன்களுக்கு நேற்று ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது ஆஸ், அணி.

நேற்றைய ஆட்டம் முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துல அந்த அணி, இந்தியாவை விட 175 ரன்கள் அதிகமாக உள்ளது.

கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்., அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் 108.3 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஆஸ், அணி.

அடுத்ததாக களமிறங்கிய இந்தியா 2-ஆம் நாளாக விளையாடியது. முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழபிற்கு 172 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில், கேப்டன் கோலி 82, ராஹானே 51 ரன்களுடன் தொடங்கினார்கள்.

இதில் ராஹானே 51 ரன்களில் அவுடானர். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து ஹனுமா களமிறங்க, போட்டியின் வேகம் சூடுபிடித்தது. மேலும் 80-வது ஓவரில் 200 ரன்கள் எட்டியது இந்தியா.

கோலி தனது சதத்தை இந்த போட்டியில் அடித்து சச்சினின் சாதனை முறியடித்தார். அதே நேரத்தில் 20 ரன்களில் ஹனுமா ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் அடுத்ததாக கோலி 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு என மொத்தம் 123 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்., அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழபிற்கு 132 ரன்கள் எடுத்து இருக்கின்றது. கவாஜா மற்றும் கேப்டன் பெய்ன் ஜோடி களத்தில் உள்ளனர்.