India vs Australia Update
India vs Australia Update

India vs Australia Update – மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்., அணிகளுக்கு இடையே இன்று இறுதி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்., அணியை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது கிடையது. 2016-ஆம் ஆண்டு இந்தியா 1-4 என தோல்வி அடைந்தது.

இன்று நடந்த போட்டியில் வெற்றி அடைந்தால் முதல் முறையாக கோப்பையை வெற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி வீரர்கள் ஆஸ்., அணியை 230 ரன்களில் சுருட்டினர். புவனேஷ் குமார் முதல் ஓவர் தொடங்கினார்.

ஆஸ்., அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 230 ரன் எடுத்து இருந்தது. 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்களான தவான் மற்றும் ரோகித் அதிர்ச்சி அளித்தனர்.

ரோகித் 9 ரன்களில் ஆட்டமிழக்க தவானும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். தல தோனி 87 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

மேலும் ஜாதவ் 61 ரன்களுடன் தோனிக்கு உறுதுணையாக களத்தில் இருந்து ஆட்டத்தை முடிக்க உதவினார்.

இறுதியில் 3 விக்கெட் இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று ஆஸ்., எதிரான ஒருநாள் தொடரை கைபற்றி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது.