India Victory
India Victory

India Victory – ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, ஜோர்டான் அணிகள் வெற்றி பெற்றனர்.

தாய்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

7 ஆண்டுகள் கழித்து ஆசியக் கோப்பை போட்டி‌டக்கு தகுதி பெற்ற இந்திய அணி தாய்லாந்து அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது.

ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் தாய்லாந்து வீரர் பன்ஸா தலையால் முட்டி அடித்த பந்தை, அற்புதமாக தடுத்தார் இந்திய கோல் கீப்பர் குர்ப்ரீத்.

அதை தொடர்ந்து 27-ஆவது நிமிடத்தில் கேப்டன் சேத்ரி அடித்த பந்து தாய்லாந்து வீரர் தீரத்தோன் கையில் பட்டதால் பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தி கோலடித்தார் சேத்ரி.

இதனால் முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

கேப்ட்ன் சேத்ரி 46-ஆவது நிமிடத்தில் உதாந்தாவிடம் இருந்து கிடைத்த பந்தை கோலாக மாற்றினார். இந்த கோல் அவரது 67-ஆவது சர்வதேச கோலாகும்.

நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய கால்பந்து போட்டியில் 55 ஆண்டுகள் கழித்து பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.