Driving license
Driving license

தற்போது நடைமுறையில் லைசென்ஸ் செல்லாது எனவும் அடுத்த ஆண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறியதாவது, நாள் முழுதும் ஒரு நாளைக்கு 32000 டிரைவிங் லைசென்ஸ்களை வாங்கவும், புதுப்பிக்கவும் செய்கிறார்கள்.

இதேபோன்று, ஒருநாளைக்கு 42000 வாகனங்கள் பதிவு செய்தும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்கிறார்கள். எனவே, இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக வரும் 2019- ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் இருந்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.

மேலும், இந்த லைசென்ஸ்கள் ATM கார்டு போன்று இருக்கும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிப்பில் QR கோடு இருக்கும்.

மேலும் இதில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்கும் நபரின் அனைத்து தகவல்களும் இதில் பதியபட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.