மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான இடியட் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Idiot Movie Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மிர்ச்சி சிவா. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் இடியட். இந்த படத்தில் நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்க ஊர்வசி, ஆனந்தராஜ், கிங்ஸ்லி, ரவி மரியா, மயில்சாமி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம்பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவாவின் இடியட் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

படத்தின் கதைக்களம் :

கதை என பெரிதாக எதுவும் இல்லாமல் பேய்களை வைத்து தில்லுக்கு துட்டு பணம் பாணியில் முயற்சி செய்துள்ள திரைப்படம் தான் இடியட். படத்திலுள்ள ஒருவரின் அறியாமையை வைத்து காமெடி படமாக இயக்கி உள்ளார் ராம் பாலா.

படத்தை பற்றிய அலசல் :

மிர்ச்சி சிவா வழக்கம்போல் கலகலப்பான நடிப்பை கொடுத்துள்ளார். நிக்கி கல்ராணி அவரது பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

காமெடி நடிகர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் முதல் பாதியில் பெரிய அளவில் காமெடி காட்சிகள் நம்மை கவரவில்லை. இரண்டாம் பாதியில் ஊர்வசி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இடம்பெறும் காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன.

படத்தில் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காமெடி செய்வதை குறிக்கோளாக வைத்து முயற்சி செய்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பலமாக அமைந்துள்ளது. ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றிருப்பது ஆறுதல் கொடுக்கிறது.

மிர்ச்சி சிவாவின் இடியட் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ஆனால் முதல் பாதியில் காமெடி காட்சிகளை கொடுத்திருந்தால் தில்லுக்குதுட்டு படங்களைப் போல இதுவும் பேசப்படும் படமாக இருந்திருக்கும். ராம்பாலா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு போனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

தம்ப்ஸ் அப் :

1. ஊர்வசி, ஆனந்தராஜ் நடிப்பு

2. இசை மற்றும் ஒளிப்பதிவு

3. இரண்டாம் பாதியில் இடம்பெற்ற காமெடி காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதி

2. அளவுக்கதிகமான உருவ கேலி காட்சிகள்

3. லாஜிக் இல்லாத காட்சிகள்