சீரியஸான படங்களில் நடித்துவிட்டேன்.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு.!
சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது சமீபகாலமாகவே நான் ரொம்ப சீரியசான படங்களில் நடித்து விட்டேன். இதனால் அடுத்ததாக நான் நடிக்க உள்ள படம் முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

