ஜெய்லர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் சிவராஜ் குமார் மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ண ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார் எனக்கு ரஜினி சார் ரொம்ப புடிக்கும் திரை துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

