அன்று பேசியதற்காக இன்று வரை வருந்துகிறேன்.. குக் வித் கோமாளி அஸ்வின் வருத்தம்.!!

அன்று பேசியதற்காக இன்று வரை வருத்தப்படுவதாக கூறியுள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி,ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் அஸ்வின் அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய்,செம்பி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஏற்கனவே அஸ்வின் ஒருமுறை கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தது பேசும் பொருளாக மாறி இருந்தது.
இந்த நிலையில இதுகுறித்து சமீபத்தில் பேசிய அஸ்வின் கடைசிவரை அந்த புண் என்னுடன் இருந்து கொண்டே தான் இருக்கும் அது போகவே போகாது என்று வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

