Hukum பாடலின் வியூஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

தற்போது வரை இப்படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான Hukum பாடலுக்கான வியூஸ் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பாடல் தற்போது வரை 15 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.