இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்காகும் Hukum பாடல்.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் ஏராளமான பல மொழி முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் பெரும் எதிர்பார்ப்பை கிரியேட் செய்து வைத்திருக்கும் இப்படத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு முதல் பாடலாக ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையதளத்தை அதிரவிட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலாக ‘Hukum’ என்ற அட்டகாசமான பாடல் வெளியானது. தொடர்ந்து ரசிகர்களை வைப் செய்து இணையதளத்தை தெறிக்க விட்டு வைரலாகி வரும் இப்பாடல் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்பதிவினை ரசிகர்கள் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.