ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர்.

நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்த இந்த படத்தில் காவாலா என்ற ஐட்டம் பாட்டுக்கு ஆட்டம் போட்டார் தமன்னா.

ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்த இந்த பாடலில் நடனமாட நடிகை தமன்னா கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.