ஓபன் சட்டையுடன் ஸ்டைலாக ரவுண்டு அடிக்கும் ஜனனியின் கிளாமரான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலாவின் அவன் இவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஜனனி. இப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

அதற்குப்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு வேழம் திரைப்படத்தில் நடித்திருந்த ஜனனி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் எப்போதும் ஹோம்லியான லுக்கில் பல ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் வெளிநாட்டில் திடீரென்று ஓபன் ஷொட்டில் கவர்ச்சி காட்டில் ரவுண்டு வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.