Hockey World Cup
Hockey World Cup

Hockey World Cup – நேற்று சென்னையில் தொடங்கிய அரைஸ் ஸ்டீல் 9-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மணிப்பூர் அடித்த கோலால் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஹாக்கி தமிழ்நாடு அரைஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பில் சீனியர் தேசிய ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

42 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன.

இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. எழும்பூர் மற்றும் ஐ.சி.எப். ஆகிய இரு இடங்களில் உள்ள செயற்கை புல்தரை ஆடுகளத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.

ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் மத்திய தலைமை செயலக அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி குஜராத் அணியை வெற்றி பெற்றது.

அடுத்து, பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் திரிபுரவையும் வெற்றி பெற்றது.

மேலும், ஆந்திரா மற்றும் மத்தியபிரதேச அணிகளுக்கு இடையே ஆட்டம் 2-2 என போட்டி டிராவானது.

அதனை தொடர்ந்து, எழும்பூரில் நடந்த ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 9-0 என்ற மிக பெரிய கோல் கணக்கில் பிகாரை வெற்றி பெற்றது.