பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

Web Ads

பாலாவிற்கு ஹிப் ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Hiphop Adhi congratulated Bala..!
Hiphop Adhi congratulated Bala..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருந்தாலும் பலருக்கு உதவி செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்

Web Ad 2

சின்னத்திரையில் மட்டும் ஜொலித்துக் கொண்டிருந்த இவர் தற்போது வெள்ளித்திரையை காலடி எடுத்து வைத்திருக்கிறார் தற்போது ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாலாவிற்கு ஹிப்ஹாப் ஆதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதாவது பாலாவின் முதல் படமான காந்தி கண்ணாடி படம் பற்றி பாசிடிவ் கமெண்ட்ஸ் கருத்துக்கள் கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோஷம் உன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து பார்க்க காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் எல்லாம் வெற்றியாக அமைய என் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.