சமீபத்தில் சினிமா உலகில் அதிகப்படியாக பேசப்பட்ட “மீ டு ” இப்போது விளையாட்டு பிரிவிற்கும் தொடர்கிறது .
பிசிசிஐ -இன் 2016 முதல் தற்போது வரை தலைமை அதிகாரி ராகுல் ஜோஷ்ரி ஆவர். ஹர்னித் கவுர் இவர் பிரபலமான பத்திரிக்கையாளர்.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு எதிரான பாலியல் குற்ற கட்டுரை ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் பெண்ணின் பெயர் குறிப்பிடவில்லை.
இதனை அடுத்து ராகுல் ஜோஷ்ரிக்கு இது தொடர்பான தெளிவாக்கத்தை வழங்க சொல்லி உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ராகுல் ஜோஷ்ரி மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்த போது இது நடந்துள்ளது என ஒரு பெண் தனது பெயரை வெளியிடாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த குற்றத்திற்கும் பிசிசிஐ -யில் பணியாற்றும் மற்றவர்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த பெண் டுவிட்டர் செய்துள்ளார்.
அதே நேரத்தில் இதனை குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக ராகுல் ஜோஷ்ரி தனது பக்கத்தின் நியாயத்தை அளிக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து மேற்படி அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது .