Heavy Rains in Tamilnadu
Heavy Rains in Tamilnadu

Heavy Rains in Tamilnadu – சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் டிசம்.6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் காரணத்தினால், தென்தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வரும் 6-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரம், கும்மிடிப்பூண்டியில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.