Heavy Rain in next Two Days
Heavy Rain in next Two Days

Heavy Rain in next Two Days – சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என இதற்கு முன்னதாகவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, தென் கிழக்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி ஆகிய இடங்களில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்து வந்தது, மேலும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியான இந்தியப் பெருங்கடலில், புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,

வடகிழக்கு பருவ மழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், வரும் 9-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.