
Heavy fog in Chennai – சென்னை: பேய்ட்டி புயல் காரணமாக, சென்னை நகரிலும், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கடும் குளிராக உள்ளது.
கஜா புயலை அடுத்து தற்போது பெய்ட்டி புயல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சென்னைக்குப் அருகில் பேய்ட்டி புயல் நிலை கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புயல் காரணமாக, இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் சென்னையில் நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை தற்போது ஊட்டியைப் போல மாறியுள்ளது . மேலும் கொஞ்சம் கூட குளிர் குறையவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதிகாலையில் எதிரில் வரும் நபர் கூட தெரியாத அளவுக்கு பனி பொழிவாக காணப்படுகிறது.
ஆனால், குளிர் வரும் அளவிற்கு பெய்ட்டி புயலால் தமிழகத்திற்கு மழை வரவில்லை. மேலும், சென்னையில் இந்த வருடம் மழை என்பது ஏமாற்றமாகவே உள்ளது.
மேலும், ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு போன்ற மாவட்டங்களில், இந்த வரும் போதுமான மழை பொழியவில்லை’.
ஆனால் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகின்றது.