
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என பலருடன் இணைந்து நடித்து விட்டார்.
ஆனால் ஒரே ஒரு குறை என்னவென்றால் அஜித்துடன் இணைந்து நடிக்காததே. இந்நிலையில் ஹன்ஷிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது
அஜித் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், அவருடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ரோபோ ஜூலியட் படத்தில் நடித்த கதாபாத்திரம் தான் தனக்கு பிடித்த கதாபாத்திரம் எனவும் கூறியுள்ளார்.