H Vinoth Clarification

H Vinoth Clarification :

தல 59 படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டு இருந்தது நான் இல்லை என எச். வினோத் அறிக்கை ஒன்றின் மூலமாக விளக்கமளித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்திருந்தன.

இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கி இருந்த எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படம் பிங் படத்தின் ரீமேக் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் எச். வினோத்தின் பெயரில் தல 59 படம் பிங் படத்தின் ரீமேக் இல்லை என ஒரு ட்வீட் பதிவிட அது சமூக வளையதளங்களில் வைரலாகி இருந்தது.

தற்போது இது குறித்து வினோத் விளக்கம் அளித்துள்ளார். அதாவது எனக்கு பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந் சமூக வளையதள பக்கத்திலும் கணக்கு இல்லை.

நான் கூறியதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. என்னுடைய அடுத்த படத்தை பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் அது தயாரிப்பு நிறுவனமிடம் இருந்து மட்டுமே வெளியாகும் என கூறியுள்ளார்.