வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவத்திற்கு செல்லாமல் இசைக் கலைஞராக இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதுதான் நவரசா கதை என தெரிவித்துள்ளார்.

GVM About Navarasa Series : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்களின் இயக்கத்தில் ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள திரைப்படம் தான் நவரசா. இந்த வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்; கோலி பின்னடைவு..

இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள பகுதிதான் கிடார் கம்பியின் மேல் நின்று. இந்த கதையில் சூர்யா இசை கலைஞராக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் கௌதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்தின் மறுபக்கம் என கூறியுள்ளார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவத்திற்கு செல்லாமல் இசை கலைஞர் ஆகியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதுதான் கிடார் கம்பியின் மேல் நின்று படத்தின் கதை என தெரிவித்துள்ளார்.

மீண்டும் சண்டைபோடும் Vijay-Ajith ரசிகர்கள்! – எச்சரித்த உயர்நீதிமன்றம் | Valimai, Beast | HD

இதனால் இந்த கதையின் மீதான எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.