
Gujarat Vs Hariyana :
புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது குஜராத் பார்சுன்.
12 அணிகள் பங்குபெற்றுள்ள 6-வது லீக் போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணியும், ஹரியானா அணியும் மோதினர்.
லீக் தொடர் இறுதி கட்டத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் நடைபெற உள்ள அனைத்து போட்டிகளிலும் எல்லா அணிகளும் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடிகின்றனர்.
அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடினர்.
முதல் பாதியில் இரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிகிக்காட்டினர். ஆனால், இரண்டாம் பாதியில் குஜராத் அணி சற்று சுறுசுறுப்பாக விளையாடவே குஜராத் அணி புள்ளிகளில் முன்னேற்றம் தெரிந்தது.
இருந்தும், ஹரியானா வீரர்கள் பெருதும் போராடினார். இறுதியில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் மூலம் குஜராத் அணி தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.