Group 2 exam

Group 2 Exam :  வரும் நவம்பர் 11 தேதி நடக்கவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் , (குரூப் 2 ) தேர்வுக்காக 6,26,503 பேர் விண்ணப்பித்து உள்ளார்கள்.

குரூப் 2 தேர்வுக்கு 1,199 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதனால் தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வுக்காக 2,868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்த குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், குரூப் 1 தேர்வுக்கு இனி 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும் என்றும், அறிக்கை வெளியிட்ட 2மாதத்தில் முதல்நிலை தேர்வு மற்றும் அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்காக ஹால் டிக்கெட் இன்று டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஹால் டிக்கெட் -ஐ www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1,199 காலி பணியிடங்களுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.