உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஓப்பனிங் வீடியோ சற்று முன்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மக்களின் ஃபேவரிட் நிகழ்ச்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை இந்நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 6:30 மணி அளவில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்க உள்ளது. எப்போதும் போல் இந்த சீசனுக்கும் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் இன்று தொடங்க இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான புதிய பிரமோ சற்று முன்பு வெளியாகி உள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் மாசாக என்ட்ரி கொடுத்து “ஒரு புதிய பயணத்தின் பிரம்மாண்ட தொடக்கம், அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்க்களம் ஆனா ஆரம்பம் இந்த வீட்டில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான கனவுகளுடன் பிக் பாஸ் சீசன் 6 தி கிராண்ட் ஓப்பனிங்” என்று அந்தப்பிரமோ வில் மாசாக கூறியுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

YouTube video