விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: ‘அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. விரைவில் அது அடுத்தகட்டத்துக்கு நகரும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்
இதன் மூலம் ‘துருவ நட்சத்திரம்’ 2026-ம் ஆண்டில் வெளியாவது உறுதி எனத் தெரிகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், டிடி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் தயாராகி நீண்ட வருடங்கள் ஆனாலும், இதன் மீதான பைனான்ஸ் சிக்கலினால் வெளியாகாமல் இருக்கிறது. இப்படம் வெளியீட்டுக்கு பின்னரே அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் கவுதம் மேனன்.
