Bigil Thalapathy Vijay
பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசை நெருங்கிய படக்குழுவிற்கு அதிரடி கண்டிஷன் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளைக்கு திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகளோ, சிறப்பு காட்சிகளோ இல்லை என படக்குழு திட்டவட்டமாக அறிவித்து விட்டது ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அரசு தரப்பில் கேட்ட போது பிகில் சிறப்பு காட்சிக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்றால் சிறப்பு கட்சிக்கு அனுமதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என படக்குழு உறுதி அளித்தால் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.