இப்படி எல்லாம் பண்ணா சீரியல் ஆயிரம் எபிசோடு போகாது என பாக்கியலட்சுமி சீரியல் குறித்து சதீஷ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிக்கும் பாக்கியாவுக்கும் விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி எல்லாம் பண்ணா சீரியல் ஆயிரம் எபிசோடு போகாது.. பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி வெளியிட்ட வீடியோ.!!

இந்த சீரியல் குறித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் சதீஷ் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கோபி கெட்டவன் இல்லை நிறைய பொய் சொல்லி இருக்கான். துரோகம் பண்ணி இருக்கான். ஆனால் அவன் நேராக எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என சொல்லி இருந்தால் சீரியல் ஆயிரம் எபிசோடு எல்லாம் போகாது.

இப்படி எல்லாம் பண்ணா சீரியல் ஆயிரம் எபிசோடு போகாது.. பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி வெளியிட்ட வீடியோ.!!

திருமண வாழ்க்கையில் பிடிக்கவில்லை என வரும்போது சேர்ந்து வாழ முடியாது. இரண்டு பேருக்கும் இல்லை ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்றால் கூட சேர்ந்து வாழ முடியாது. பாக்யா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. பெண்கள் பாவம் பல வருடங்களாக ஆணாதிக்கத்தால் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். என்னுடைய ஓட்டு பாக்யாவுக்கு தான் என பேசி உள்ளார்.

இதோ அந்த வீடியோ