அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அறிவிப்பு வெளியானதோடு அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இன்று குறித்த அப்டேட் வெளிவரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதற்காக அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மைத்ரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்துக்கு குட் பேட் அக்லி ( good bad ugly) என டைட்டில் வைத்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.