மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது கோட் பட உரிமை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை அகிம்சா நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன.
இது குறித்து அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தில் உரிமம் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.