உடல் நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் ஜி எம் குமார் அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர்களின் ஒருவர் ஜி எம் குமார். இவர் அறுவடை நாட்கள், பிக் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவன் இவன் உட்பட பல்வேறு படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது ஓரளவுக்கு உடல் நலம் தேறி சிறப்பு வார்டுவிற்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் பூரண குணம் பெற்று ஜி எம் குமார் அவர்கள் வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.