Genilia Fight With Husband

உன் கண்முன்னே வேறு ஒரு நடிகைக்கு முத்தம் கொடுத்த தன் கணவரை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை ஜெனிலியா.

Genilia Fight With Husband : தமிழ் சினிமாவில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் மற்றும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெனிலியா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். பிரபல நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெனிலியாவின் கணவர் வேறு ஒரு நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார். தன் கணவர் தன் கண்முன்னே வேறு ஒருவருக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த ஜெனிலியா வீட்டிற்கு வந்து அவரை வெளுத்து வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.