தனது பெயர் மாற்றம் காரணம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் விளக்கம் கொடுத்துள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனனின் பெயர் மாற்றம் குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், தனது பெயர் மாற்றத்திற்கு பின்னால் சாதி வெறி கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது அவர் நான் பிறக்கும்போதே எனக்கு கௌதம் வாசுதேவ் மேனன் என்று தான் பெயர் வைத்தார்கள். வெளியில் பேசுவது போல் எனக்கு சாதிவெறி போன்ற கேவலமான எண்ணங்கள் கிடையாது. ஏனெனில் என் தந்தை மலையாளி, தாய் தமிழ் என் மனைவி கிறிஸ்டியன். அதனால் எனது குடும்பத்தில் சாதிவெறி கிடையாது என்று கூறியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.