கேங்கர்ஸ் : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

gangers movie 2 days collection update

gangers movie 2 days collection update

தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.

நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த திரைப்படம் இரண்டு நாளில் 4.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

gangers movie 2 days collection update

gangers movie 2 days collection update