ஏன் அடிக்கிறாங்க.. எதுக்கு அடிக்கிறாங்க தெரியல? காந்தி கண்ணாடி இயக்குனர் வேதனை..!

Web Ads

காந்தி கண்ணாடி படம் குறித்து இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார்.

Gandhi Kannadi director Sherief anguish..!
Gandhi Kannadi director Sherief anguish..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் வேதனையாக பேசியுள்ளார். படத்திற்கு ஷோ இல்லை என்று சொல்லி போன் வருது. ஏன் எதுக்குன்னு தெரியல தியேட்டரில் பேனர் கூட வைக்க விடமாட்டேங்குறாங்க கிழிக்கிறாங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்ற பேசியுள்ளார்.இது மட்டும் இல்லாம நான் 50 பைசா ஒரு ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டுன பையன் சார் பாலா காரைக்காலில் இருந்து சினிமா கனவோட ஓடி வந்த பையன் சார் ஏன் அடிக்கிறாங்க எதுக்கு அடிக்கிறாங்கன்னு தெரியல சத்தியமா புரியல எங்கள அடிக்கணும்னு தோணுச்சுன்னா நேர்ல வந்து செவில ரெண்டு அடி கூட அடிச்சிட்டு போங்க படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க அதுக்கு ரொம்ப நன்றி என்று அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gandhi Kannadi director Sherief anguish..!
Gandhi Kannadi director Sherief anguish..!