Pushpa 2

கேம் சேஞ்சர் : இயக்குனர் ஷங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!

கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

Game Changer Do you know how much director Shankar's salary is
Game Changer Do you know how much director Shankar’s salary is

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த படத்தில் ஹீரோவாக ராம்சரனும் வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தை இயக்க ஷங்கர் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Game Changer Do you know how much director Shankar's salary is
Game Changer Do you know how much director Shankar’s salary is