
மும்பையில் விமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பணிப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், டெல்லிக்கு கிளம்ப தயாரானது.
அவ்விமானத்தில் இருந்த 53 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது தவறி கீழே விழுந்தார்.
விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.