தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சிறிய நடிகர்கள் முதல் விஜய், அஜித் என பெரிய நடிகர்கள் வரை அனைவரின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
அஜித், விஜயை அடுத்து தற்போது யோகி பாபு முன்னணி நடிகரான சிம்புவடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு தெலுங்கில் அட்டரெண்டிக்கி தாரெடி படத்தின் ரி-மேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாக்கியுள்ளது.
சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் யோகி பாபுவும் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.