First Single Track Release Update in Beast

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

First Single Track Release Update in Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் படத்தை இயக்கி வருகிறார்.

தமிழை தப்பா பேசுனா எனக்கு பிடிக்காது – Actor Nani Latest Speech | Shyam Singa Roy Trailer Launch

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் செல்வராகவன் உட்பட மேலும் சில நடிகர்கள் வில்லன்களாக நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய் முதல் முறையாக உருது மொழியில் பேசி நடித்து இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

சென்னையில் கூடைப்பந்துப் போட்டி : தமிழக பெண்கள் அணி முதல் தோல்வி..

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. தீபாவளி விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடல் தற்போது புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதற்கான வேலைகளில் அனிருத் முழுமூச்சாக இறங்கி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. இது தளபதி விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.