தனுஷ் தான் பெஸ்ட் என வாத்தி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து வாத்தி என்ற திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெங்கட் அட்லூரி இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டது என்பதை அழுத்தமாக பேசும் கதையாக இது இருக்கும் என இயக்குனர் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் ஓவர் சீஸ் சென்சார் போர்டு உறுப்பினர் உமர் சந்து இந்த படம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்த அவரது பதிவில் வாத்தி படத்தை பார்த்து விட்டேன், தனுஷ் தான் பெஸ்ட் என தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் நீங்க சொன்னது 100 சதவீதம் சரிதான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.