இந்த வாரம் நாமினேஷனில் நான்கு பேர் இடம்பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

முதல் வாரம் நாமினேஷனுக்கு வந்த நான்கு பேர்.. அந்த ஒருவரை வெளியேற்ற கட்டம் கட்டும் ரசிகர்கள் - வெளியேறப் போவது யார்??

பொதுவாக எப்போதும் முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் முதல் எலிமினேஷன் நடப்பது வழக்கம். சீசன் ஆறிலும் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேசன் பட்டியலில் ராம் ராமசாமி, அஸீம், தனலட்சுமி மற்றும் விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நான்கு பேரை பொறுத்தவரையில் தனலட்சுமிக்கு மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

முதல் வாரம் நாமினேஷனுக்கு வந்த நான்கு பேர்.. அந்த ஒருவரை வெளியேற்ற கட்டம் கட்டும் ரசிகர்கள் - வெளியேறப் போவது யார்??

ஜி பி முத்து உடன் தொடர்பில் ஈடுபட்ட இவரை முதல் ஆளாக வெளியேற்ற வேண்டும் என நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே சமூக வலைதளங்களில் பேச்சு தொடங்கியது. இதனால் இந்த வார எலிமினேஷனில் தனலட்சுமி வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.