விருமன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விருமன். பி ஜி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கொம்பன் படத்தை தொடர்ந்து இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் வேட்டையாடிய விருமன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ ரிப்போர்ட்

சூர்யாவின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி உள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் முதல் நாள் வசூலில் ரூபாய் 4 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வசூல் வேட்டையாடிய விருமன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ ரிப்போர்ட்

மேலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.