Web Ads

புதிய திறமையாளர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் முன்னுரிமை..

தமிழ் சினிமாவில் பான் இந்திய அளவிலான படங்களும், சிறு பட்ஜெட் படங்களும் மாறி மாறி உருவாகின்றன. இதில் நல்ல கதைக்களம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன.

அதாவது, சிவ​கார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஎச்கே’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்​கீஸ் நிறுவனம், அடுத்து விக்ரம் நடிக்​கும் படத்தை தயாரிக்​கிறது.

இதையடுத்து, இந்​நிறுவனம் தயாரிக்​கும் படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்குகிறார். இதில் ஃபைனலி பரத் நாயகனாக நடிக்​கிறார். அவர் ஜோடி​யாக ‘குடும்​பஸ்​தன்​’​நாயகி சான்வி மேக்னா நடிக்​கிறார். பாலசரவணன் முக்​கிய கதாபாத்திரத்தில் நடிக்​கிறார்.

இப்​படம் குறித்து பேசிய தயாரிப்​பாளர் அருண் விஷ்​வா, ‘பு​திய திறமையாளர்​களை​யும் நல்ல கதைகளை​யும் ஊக்குவிப்​பதை நோக்​க​மாகக் கொண்​டிருக்​கிறோம். அவ்கை​யில் ஹரி ஹரசுதனை இயக்குநராக அறி​முகப்​படுத்​துகிறோம். இதுவும் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும்​’ என கூறியுள்ளார்.

finally bharath paired with kudumbasthan saanve megghana
finally bharath paired with kudumbasthan saanve megghana