பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா சூப்பர் ஹிட் சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Fareena in Abi Tailer Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்?? சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க ஒப்பந்தமான வெண்பா - அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?

தற்போது பாரதி கொஞ்சம் கொஞ்சமாக வெண்பா குறித்து தெரிந்து கொண்டு வருகிறார். இதனால் அவரையும் அறவே வெறுக்க தொடங்கி விட்டார். அதேசமயம் கண்ணம்மாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு எடுப்பார் என சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது வில்லியாக நடித்து வரும் பரினா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்?? சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க ஒப்பந்தமான வெண்பா - அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?

பாரதி மீண்டும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ ஓகே சொன்னது போலவும் ஆனால் ஒரு கண்டிஷன் கூறியதை போலவும் ஏற்கனவே ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.