துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் வெளியிட்ட பதிவு வைரல்.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஓர் சுவாரஸ்யமான விஷயத்தை அஜித் ரசிகர்கள் பேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர்கள் ‘ஒரு நாள் ராப் சாங் படப்பிடிப்பின் போது நாங்க ஒரு நாலு பேரு ஓராம நின்னுட்டு இருந்தோம்.எங்கள் பாத்து ‘ஏன் நின்னுட்டு இருக்கீங்க’ வேலை பாத்து டயர்டா இருப்பீங்கன்னு உட்காருங்கன்னு சொன்னாரு. அதுக்கு ஏன் பக்கத்துல இருந்த பையன் பரவால சார்-னு சொன்னதுக்கு தல என்னா தெரியுமா சொன்னாரு? ‘சார்-னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுன்னு’ சொல்லிட்டு ஸ்மைல் பண்ணிட்டு போனாரு என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன அஜித் ரசிகர்கள் அந்த ரசிகனின் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.